paradsi

டாக்டர்  பால்ஹாஸ் டானியல் (Paul Haris Daniel) எழுதிய ‘ரெட் டீ’ (Red Tea) என்ற ஆங்கில நாவலின் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘எரியும் பனிக்காடு’ கதை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘பரதேசி’.

சூடான தேனீர்சாப்பிட ஆசைப்பட்ட ஆங்கிலேயர்கள் (எந்த விஷயத்திற்கு தான் ஆங்கிலேயர் கள் ஆசைப்படவில்லை?) அப்பாவி கிராம மக்களை மொத்தமாக அழைத்துக் கொண்டு அடிமை தொழிலாளிகளாக ‘டீ எஸ்டேட்’டில் தேயிலை பறிக்கும் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். அந்த அப்பாவி அடிமைகளின் ஆழமான துயரங்களை பதிவு செய்து திரையில் காட்ட முயற்சி செய்திருக்கிறார் ‘பரதேசி’ இயக்குனர் பாலா.

படத்தின் முதல் காட்சி, ஓலைச்சுவடி எழுத்துக்கள் போல எழுதப்பட்ட வாக்கியங்களின் நடிகர் ராஜ்கிரண் குரல், பின்னணியில் வாசிக்கப்பட படம் ஆரம்பமாகிறது… ‘ஸ்டெடி காம்’ காமிரா ‘சாலூர்’ என்ற குக் கிராமத்திற்குள் நுழைந்து, மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதையும், பலவித கதாப்பாத்திரங்களையும், அந்த கிராம மக்கள் அனைவரும் ‘கொப்புர தேங்காய்’ முடிவெட்டு ஸ்டைல்களுடன் திரிவதும், குளித்து, துவைத்து பலவருடங்கள் ஆனது போல உடல், அழுக்கான ஆடைகளுடன் பரப்பரப்பாக ஓடுவதும்… பல கிராம மொழி வசனங்கள் பேசுவதும், இதெல்லாம் ஏ.சி.தி ரயரங்கில் பாப்கார்ன், பெப்சியுடன் அமா;ந்திருக்கும் ரசிகர்கள், திரையில் ஒரு கறுப்பு வௌ;ளை படத்திற்கு ரூ.150 கொடுத்து விட்டு அமர்ந்து விட்டோமோ என்ற மனக்கலக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

‘ஸ்டெடி காம்’ காமிரா மூலமாக P.ழு.ஏ ஷாட். இயக்குநர் பார்வையில் 1939ஆம் ஆண்டின் சாலூர் என்ற குக்கிராமத்தின் அத்தியாயம் ஆரம்பம். “நியாயமாரே” சத்தம் போடும் அதர்வா… அவர் பேசும் ஏற்ற இறக்க குரல்… கண்களை மூடி கேட்டால், நடிகர் சூர்யாவின் குரல் தான் கேட்கிறது! அழகான வேதிகா, திட்டு திட்டாக முக ஒப்பனையுடன், கண்களை உருட்டி, வாயை பிளந்து சுறுசுறுப்பாக திரியும் ஒரு கிராமத்து பொண்ணு… இப்படிப்பட்ட பொண்ணு, இடைவெளிக்குப் பிறகு என்ன ஆகப் போகிறார்?

“இதுபோன்ற ‘துரு துரு’வான பெண் சோகமாக கர்பமாக திரிய போகிறார்” – என்று நமது சாதாரண ரசிகர்களை தயார்படுத்தி வைத்திருக்கிறது. நமது பல கிராமிய சினிமாக்கள்!
வேதிகாவின் உடல்மொழி, அவளது தாயாரின் உடல்மொழி, துடப்பத்தால் அடிப்பது, பானை உடைப்பது, ‘நா’ கூசாமல் பலகெட்ட வார்த்தைகளால் பேசுவது, இப்படி பல விஷயங்கள் திரையில் பார்க்கும் போது, நம் கண்களில் சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா, சங்கீதா, லைலா… இப்படி பல நடிக நடிகைகள் நடித்த பாலாவின் மற்ற படங்களின் சாயல் நிச்சயமாக ரசிகர்களை நினைவுப்படுத்துகிறது.

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், வாத்தியார் சொன்ன சொல்லை தட்டாமல் செய்யும் பிள்ளைகள் அவர் போலவே இருப்பார்… பள்ளிகளில் ஹிந்தி மாஸ்டர் போல நிறைய போர்கள் நடித்து காட்டுவார்கள்…

நடிக – நடிகைகளை பல மனிதர்களைப் பார்த்து, சுற்றுச்சூழலைப் பார்த்து, தன்னை மெருகேற்றி கொண்டு (ழுடிளநசஎயவழைn)… கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை உணர்ந்து, பலவிதமான நடிப்புகளை அவருக்கேற்ற உடல்மொழி அளவுகோல் கொண்டு வெளிப்படுத்துபவர்கள் தான் நடிகர்கள்.
நடிப்பு என்பது இரண்டு வகை ‘மெத்தட் ஆக்டிங்’ ‘method acting…. realistic acting’…. யதார்த்தமான நடிப்பு… Tailor Made Role… இந்த நடிகருக்குதான் இந்த கதாப்பாத்திரம் பொருந்தும்…  ரஜினிக்கும், கமலுக்கும் உள்ள வித்தியாசம். ‘தசாவதாரம்’… ‘பாட்ஷா’ – இருபடங்களும் அவர்களுக்கேற்ற Tailor Made Role… சாpயாக தைக்கப்பட்ட சட்டை போல… கச்சிதமாக பொருந்தக்கூடிய கதாப்பாத்திரங்கள் அவர்கள் மேற்கொண்டதால் படங்களும் அவர்களது நடிப்பு வெற்றி பெற்றன… பேசப்பட்டன…

ஒரு இயக்குநர் தன் நடிப்பு தாகத்தை, தனது படங்களில் தான் நினைப்பது போல் வரவேண்டும் என்று பள்ளி வாத்தியாரைப் போல் அடித்து சொல்லி நடிப்பவர்கள், இயக்குநர்ன் நடிப்பு தாகத்தை தீர்க்கும் ஒரு வடிகாலாக தான் இருப்பார்கள்!

Acting should happen…கதாப்பாத்திரத்தை தொpந்து கொண்டு, புரிந்து, அதை உணர்ந்து வெளிப்படுத்த தொரிந்தவன் தான் நடிகன்… நடிகன் மீது நடிப்பை திணிக்கக் கூடாது…
‘பரதேசி’ படம் விருதுகள் பல கிடைக்கும் என்றனர் பலர். ஆனால் இந்த படத்திற்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்புகள் மிக மிகக்குறைவு!

மொத்தத்தில படமும்… படத்தில் நடித்த நடிக – நடிகைகளும், நாம் படம் பார்க்கும் போது ஒரு Artificial Presentation செயற்கை தன்மை சற்றுத் தூக்கலாக படம் முழுக்க தொpந்தது. ‘செப்பியாடோன்’ (Sepioton) நிறத்தில் படம் முழுக்க காட்சிகள், – காமிரா கோணங்கள், பிரமாதம்.

பரதேசி’ கிராமத்தில் ஒட்டு பொறுக்கி அதர்வா, அங்கம்மா (வேதிகா) இவர்களது காதல் காட்சிகள் முன் பகுதியில் கொஞ்சம்… அதர்வாவின் தாய் கிழவியாக நடித்த கச்சம்மாள் நிச்சயம் விருது தரலாம்… கூன் போட்ட உடம்பு, அவர் பேசும் வசனங்கள்… நடை உடை பாவனை அத்தனையும்…. பிரமாதம்….. கணவன் மனைவியாக வரும் உதய் – ரித்விகா நடிப்பு மனதில் பதிகிறது…
சங்கர் மாஸ்டர் கிருத்துவ பரிசுத்தம் டாக்டராக கிராமத்திற்குள் வந்து, படிப்பறிவு இல்லாத அந்த அப்பாவி அடிமைகளை, கிருத்துவர்களாக மாறச் செய்யும் ஆடல், பாடல் காட்சி தியேட்டரே கரகோஷத்தில் அதிர்கிறது… மதம் மாற்றம் எப்படி ஏற்படுகிறது என்பதை மிகமிக நகைச்சுவையோடு இந்த ‘சீரியஸ்’ஆன காட்சியமைப்பு சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிகிறது… (பரிசுத்தம் டாக்டர்) சிவசங்கர் மாஸ்டருக்கு பாராட்டுக்கள்… அவரது மனைவியாக வரும் ஆங்கில பெண், முக அமைப்பு, உடல் மொழி இவைகள் நாம் தூர்தர்ஷன், ஜீ டிவி, இன்னும் பல தொலைக்காட்சிகளில் காலை ஒளிப்பரப்பாகும் கிருத்துவ நிகழ்ச்சிகளில் காணும் பெண் போதனையாளர் போல அப்படியே இந்தப் படத்தில் பொருந்தி இருக்கிறார் அந்த ஆங்கில நடிகை.
‘பரதேசி’ படத்திற்கு இந்த விமர்சனம் எழுதி முடிப்பதற்குள் ஆடை வடிவமைப்பிற்காக பூர்ணிமா ராமசாமிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்ற செய்தி. இந்த விருது கிடைத்ததற்கு படக்குழுவினர் ஆறுதலுடன் மகிழ்ச்சி அடையலாம்.

கிராமத்தில் பஞ்சம் இல்லை…. அரிசி தாராளமாக கிடைக்கிறது… ‘கள்ளு’ கிடைக்கிறது… குழந்தைகள் மகிழ்ச்சியோடு விளையாடுகிறார்கள், காதல் பாடம் அரங்கேறுகிறது… ஒரு விழாகோலமாக ஒரு திருமணம் நடக்கிறது… கிராமமே கொண்டாடுகிறது. இப்படி மகிழ்ச்சியோடு இருக்கும் கிராம மக்கள், வால்பாறை தேயிலை தோட்ட வேலைக்கு பல நாட்கள் நடந்தே போகிறார்கள். அடிமைகளாக தேயிலை தோட்டத்தில் வேலைக்கு அமா;த்தப்படுகிறார்கள்… தப்பிக்க நினைக்கும் தொழிலாளியின் காலில் நரம்பு வெட்டப்படுகிறது….

ஆக மொத்தத்தில் ‘பரதேசி’ படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்கள், இந்த படத்தின் ‘டீசா; டிரைலா;’ பற்றித் தான் பேச்சு.. ‘யூ டியூப்’ல் மிக பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது… அப்படி என்ன அந்த ‘டிரெய்லர்’? இயக்குனர் பாலா நடிகர்களை பிரம்பால் அடித்து சொல்லி கொடுப்பதும், கன்னத்தில் அறைவதும், காலால் எட்டி உதைப்பதும், சரமாரியாக வார்த்தைகளால் நடிக நடிகைகளை வசைப்பாடுவதும்… இப்படி பல காட்சிகள் இந்த ‘பரதேசி’ முன்னோட்ட குறும்படத்தில் வருகிறது….

பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள்… இப்படியா நடிக – நடிகைகளை அடித்து, திட்டி நடிப்பை சொல்லி தருவார்கள்… இப்படி கேள்விகள் மனதில் எழுந்தன… சில இயக்குநர்கள் கோபத்தில் கையில் கிடைக்கும் ‘செல்ஃபோனை’ போட்டு உடைப்பார்கள். தலையில் அணிந்திருக்கும் ‘தொப்பியை’ தூக்கி எறிவார்கள், உதவி இயக்குனர்களை சரமாரியாக திட்டுவார்கள்….
‘பரதேசி’ படத்தைப் பார்த்தவர்கள் எண்ணிக்கையை விட, ‘பரதேசி’ படத்தின் முன்னோட்டம் பார்த்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில்…

காரணம், ‘பரதேசி’ படத்தை விட பாலா நடிக நடிகைகளை அடித்து, நடித்து காட்டிய காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது….

‘பரதேசி’ படம், மற்ற இயக்குநர் பாலாவின் படங்களின் சாயல்… மனதை நெகிழ வைக்காத படம் ‘பரதேசி’! கொப்புர தேங்காய் முடி ஸ்டைல்களுடன் பல துணை நடிகர்கள் உட்கார்ந்திருக்கும் போஸ்டர் மெல்கிப்சன்  இயக்கிய ‘அப்போகலிப்டோ’ படமும் – அதன் போஸ்டரும் நினைவுப்படுத்துகிறது!